வெத்திலை பூண்டு சாதம்

தேவையானவை பொருட்கள் வெற்றிலை - 3 சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ பூண்டு - 5 பல் சோம்பு - 1/4 டீ ஸ்பூன் பட்டை - 1 துண்டு நெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து உப்பு - சிறிதளவு மசாலா - 2 ஸ்பூன் மசாலா : கருப்பு எள் - 1 ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன் சுக்கு - 1/2 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 5 விரளி மஞ்சள் - 1/2 துண்டு உப்பு - தேவைக்கேற்ப அனைத்தும் எண்ணெய் விடாமல் வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். செய்முறை : # அரிசியை உதிரியாக வடித்து வைக்கவும். # கடாயில் நெய் விட்டு பட்டை, சோம்பு சேர்த்து வறுத்து பூண்டு சேர்த்து வதக்கவும். # வெற்றிலையை நறுக்கி சேர்க்கவும். # தயார் செய்த மசாலாவுடன் தண்ணீர் விட்டு நன்கு கிளறவும். # உதிரியாக தயார் செய்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும் சிறிதளவு தண்ணீர் தெளித்து குறைவான தீயில் மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து கிளரி இறக்கவும். சுவையான வெற்றிலை சாதம் ரெடி.